செய்திகள்

பிரதமர் மோடி 9-ந்தேதி திருப்பதி வருகை

Published On 2019-06-07 01:50 GMT   |   Update On 2019-06-07 01:50 GMT
பிரதமர் நரேந்திர மோடி 9-ந் தேதி திருப்பதி வருகிறார். வெங்கடேஸ்வரா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு உடனே டெல்லி திரும்புகிறார்.
திருப்பதி :

பிரதமர் நரேந்திர மோடி நாளையும், நாளை மறுநாளும் மாலத்தீவு மற்றும் இலங்கையில் பயணம் மேற்கொள்கிறார். பின்னர் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருப்பதி அருகே உள்ள ரேணிகுன்டா விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து திருமலை திருப்பதி செல்கிறார்.

திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்து வழிபடுகிறார். பின்னர் உடனே டெல்லி புறப்பட்டு செல்கிறார். இது பிரதமர் மோடியின் பயணம் பற்றிய தற்போதைய தகவல் என ஒரு அதிகாரி தெரிவித்தார்.

பதவியேற்ற பின்னர் முதல் முறை

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ரேணிகுன்டா விமான நிலையம் மற்றும் அங்கிருந்து திருப்பதி செல்லும் பாதை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியுடன், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, கவர்னர் நரசிம்மன் ஆகியோரும் திருப்பதி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமர் பதவி ஏற்ற பின்னர் திருப்பதி கோவிலுக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையான் வெங்கடேஸ்வராவின் தீவிர பக்தரான மோடி 2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் வேட்பாளராக இருந்தபோது திருப்பதி கோவிலுக்கு வந்தார். பின்னர் பிரதமரானதும் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதமும், 2017-ம் ஆண்டு ஜனவரி மாதமும் அவர் திருப்பதி வந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

Similar News