குஜராத் மாநிலத்தில் 4. 3 ரிக்டர் அளவுகோலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
குஜராத்தில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
பதிவு: ஜூன் 06, 2019 08:21
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் நேற்று இரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது என காந்திநகரில் உள்ள பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பானஸ்கந்தா மாவட்டம் பாலான்பூரை மையமாக கொண்டு 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
இந்த லேசான நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை என அம்மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :