செய்திகள்

காஷ்மீரில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் ரம்ஜான் கொண்டாட்டம்

Published On 2019-06-05 10:22 GMT   |   Update On 2019-06-05 10:22 GMT
காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பொது மக்களுடன் சேர்ந்து புனிதமான ரம்ஜான் திருநாளை கொண்டாடினர்.
ஸ்ரீநகர்:

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

முப்பது  நாட்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்த நிலையில், நிறைவாக இந்த நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.



ஒரு மாத காலம் கட்டுப்பாடாக வாழ உதவியதற்காகவும் இம்மாதத்தில் இறைமறையாம் திருக்குர்ஆனை அருளியதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள் இது.

இந்த பெருநாளை முன்னிட்டு அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ‘ஈத்கா’ எனும் திறந்தவெளி தொழுகையும் நடைபெற்றது.



நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பெருநாளை நாட்டை காக்க போராடும் இந்திய ராணுவ வீரர்கள், காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காத்திக்கு உட்பட்ட பகுதியில் கொண்டாடி வருகின்றனர்.

அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்களை ஆரத்தழுவி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்களும், 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் கலந்துக் கொண்டனர்.

 
Tags:    

Similar News