செய்திகள்

தேசிய போலீஸ் நினைவிடத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா மலரஞ்சலி

Published On 2019-06-02 05:13 GMT   |   Update On 2019-06-02 05:13 GMT
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று டெல்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவிடத்தில் கடமையின்போது உயிர்நீத்த காவல் துறையினருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி:

சீனாவுக்கும் இந்தியாவுக்கு இடையில் கடந்த 1959-ம் நடைபெற்ற மோதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். அவர்களையும், சுதந்திரத்துக்கு பின்னர் நாடு முழுவதும்  கடமையின்போது வீரமரணம் அடைந்த சுமார் 35 ஆயிரம் போலீசாருக்காக டெல்லி சானக்புரி பகுதியில் மிக பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

6.12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போலீஸ் நினைவிடம் மற்றும் சீருடை பணியாளர் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைத்தார்.



இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று டெல்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவிடத்தில் கடமையின்போது உயிர்நீத்த காவல் துறையினருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

Tags:    

Similar News