டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சந்தித்தார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் கிரண்பேடி சந்திப்பு
பதிவு: ஜூன் 02, 2019 03:20
புதுடெல்லி:
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவையும் நேற்று சந்தித்து பேசினார்.
புதுச்சேரி மாநிலத்தின் முன்னுள்ள சவால்கள் பற்றி அவர் அமித்ஷாவுடன் விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பது பற்றியும் அவர் அமித் ஷாவிடம் விவாதித்தார்.
இதை கிரண்பேடி ‘வாட்ஸ் அப்’ தகவல் மூலம் தெரிவித்துள்ளார்.
Related Tags :