செய்திகள்

மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிந்தும் ஓயாத வன்முறை - பாஜக தொண்டர் படுகொலை

Published On 2019-05-27 07:02 GMT   |   Update On 2019-05-27 07:02 GMT
மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல்கள் வலுத்துவரும் நிலையில் மேலும் ஒரு பாஜக தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொல்கத்தா:

மத்தியில் பிரதமர் மோடியுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது அம்மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக தலைவர்களின் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்.

இதனால் பல மாவட்டங்களில் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல்கள் வெடித்தன. இருதரப்பினரும் சரமாரியாக வெட்டுக்குத்து சம்பவங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில் பாஜக பிரமுகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி அங்கு பாஜக அதிக இடங்களை கைப்பற்றி, மம்தாவின் கை சரிந்ததும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தற்போது மிகுந்த ஆவேசத்திலும் விரக்தியிலும் உள்ளனர்.



இந்நிலையில், வடக்கு பர்கானா மாவட்டத்துக்குட்பட்ட பட்டாப்பாரா பகுதியில் பாஜக தொண்டரான சந்தன் ஷா என்பவரை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நேற்றிரவு சுட்டுக் கொன்றனர்.

இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்ததும் பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
Tags:    

Similar News