செய்திகள்

ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்

Published On 2019-05-26 07:40 GMT   |   Update On 2019-05-26 07:40 GMT
முன்னாள் மத்திய மந்திரியான ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் மர்ம நபர்களால் இன்று சுட்டு கொல்லப்பட்டார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியுற்றார்.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இங்குள்ள பரவுலியா கிராமத்தின் குடியிருப்புவாசிகளிடம் காலணிகளை கொடுக்க செய்து ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் இரானி என்று காங். கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.



கிராம மக்களுக்கு காலணிகளை வழங்கிய பணியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங் (50) ஈடுபட்டார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சுரேந்திரா சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News