செய்திகள்

சிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா

Published On 2019-05-25 15:08 GMT   |   Update On 2019-05-25 15:08 GMT
சிக்கிம் மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கட்சி தலைவர்கள் இன்று கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
காங்டாக்:

சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாநில கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கட்சி, ஆட்சியை பிடித்துள்ளது. 32 தொகுகிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா 17  தொகுதிகளிலும், ஆளுங்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்நிலையில், பெரும்பான்மை பெற்றுள்ள சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பி.எஸ். கோலே தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற குழுவினர், இன்று கவர்னனனர் கங்கா பிரசாத்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். எனினும், முதலமைச்சர் யார்? என்பதை அக்கட்சி வெளியிடவில்லை. விரைவில் அறிவிக்க உள்ளதாக கோலே தெரிவித்தார்.



முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரம் கோலேவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், அவர் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர்.

ஊழல் வழக்கில் கோலே சிறைத்தண்டனை பெற்றதாலும், 2017ல் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாலும் அவரை முதலமைச்சராக பதவியேற்க அழைக்கலாமா? என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய அரசு பதவியேற்பு விழா 28-ம் தேதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News