செய்திகள்

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி., அமேதி காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

Published On 2019-05-24 09:29 GMT   |   Update On 2019-05-24 09:29 GMT
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் உ.பி. மாநில தலைவர் ராஜ் பபர் ராஜினாமா செய்தார்.
லக்னோ:

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரசேதத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா -62 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்-10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி-5 தொகுதிகளிலும், அப்னாதளம் -2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே காங்கிரஸ் கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மட்டும் ரேபரேலி தொகுதியில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட கூடுதலாக 55 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், மிக மோசமான இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில தலைவர் ராஜ் பபர் மற்றும் அமேதி மாவட்ட தலைவர் யோகேந்திர மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.
Tags:    

Similar News