செய்திகள்

வாரணாசி தொகுதியில் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி

Published On 2019-05-23 15:07 GMT   |   Update On 2019-05-23 15:07 GMT
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
லக்னோ:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தமுறை வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார்.

வாரணாசியில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முழுமையான முடிவுகள் வெளியான நிலையில் பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகளை பெற்றார். இரண்டாவது இடத்தை பிடித்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகளை பெற்றார்.

ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 548 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டில் இதே தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3 லட்சத்து 71 ஆயிரத்து 784 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News