செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்- கருத்துக் கணிப்புகள் சரியாக இருந்தன

Published On 2019-05-23 07:34 GMT   |   Update On 2019-05-23 09:07 GMT
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது மத்தியில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று பெரும்பாலான நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டன.

அந்த முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே 7 கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. 9 நிறுவனங்கள் சார்பில் கருத்து கணிப்புகள் வெளியானது. அவை அனைத்திலும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த கருத்து கணிப்புகளை நம்ப இயலாது என்று கூறியிருந்தனர். பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று பேசி வந்தனர். எனவே கருத்து கணிப்புகள் துல்லியமாக இருக்குமா? என்ற சந்தேகம் எல்லோரது மனதிலும் இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மதியம் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பாரதிய ஜனதா கடந்தது.

542 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தபோது பாரதிய ஜனதா கூட்டணி 328 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 106 இடங்களிலும், மாநில கட்சிகள் 108 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன.

தேர்தலுக்கு பின்பு நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகள் இதே ரீதியில்தான் சரியாக இருந்தன.


Tags:    

Similar News