செய்திகள்

போர் விமானத்தில் பகலில் பறந்த முதல் இந்திய பெண் விமானி பாவனா காந்த்

Published On 2019-05-22 18:41 GMT   |   Update On 2019-05-22 18:41 GMT
பீகாரை சேர்ந்த பாவனா காந்த் போர் விமானத்தில் பகலில் பறந்த முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
புதுடெல்லி:

இந்திய விமானப்படையில் பெண் விமானிகளை சேர்க்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்தது. அந்த வகையில் போர் விமானங்களை இயக்க பீகாரை சேர்ந்த பாவனா காந்த் உள்ளிட்ட பெண்கள் குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

போர் விமான குழுவில் பாவனா காந்த் 2017-ம் ஆண்டு இணைந்தார். அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மிக்-21 விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்தார். விடா முயற்சியுடன் தீவிர பயிற்சி மேற்கொண்ட பாவனா காந்த் போர் விமானத்தில் பகலில் பறந்த முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார் என இந்திய விமானப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
Tags:    

Similar News