செய்திகள்

இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு சிறைபிடிப்பு- ரூ.400 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

Published On 2019-05-21 09:35 GMT   |   Update On 2019-05-21 14:52 GMT
இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்த மீன்பிடி படகை கடலோர பாதுகாப்பு படையினர் சிறைப்பிடித்து, அதில் இருந்த 400 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கட்ச்:

இந்திய கடலோர காவல் படையினர் இன்று சர்வதேச கடல் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மீன்பிடி படகு, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்ததை கவனித்தனர்.



உடனடியாக அந்த மீன்பிடி படகை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். படகை சோதனையிட்டபோது, அதில் 194 பாக்கெட்டுகளில் ஹெராயின் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களையும் படகையும் கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். படகில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
Tags:    

Similar News