செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நம்பாதீர்கள் - வெங்கையா நாயுடு அறிவுரை

Published On 2019-05-19 20:29 GMT   |   Update On 2019-05-19 20:29 GMT
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நம்ப வேண்டாம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
குண்டூர்:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

எனது பங்களிப்பு இல்லாமல் இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. துணை ஜனாதிபதி ஆவதற்கு முன்பு, ஒரே நாளில் 16 தேர்தல் கூட்டங்களில் நான் பேசுவது வழக்கம். இப்போது மக்களிடம் இருந்து விலகி விட்டேன். ஆனால், மதிக்கத்தக்க பதவியில் இருக்கிறேன். இப்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இந்த எக்சிட் போலை நம்பாமல், எக்ஸாட் போலை (நிஜ தேர்தல்) நம்புங்கள்.

சாதி, மதம், பணம் பார்த்து தேர்தலில் ‘சீட்’ கொடுப்பது கவலை அளிக்கிறது. அவர்கள் தேர்தலில் வெற்றிபெற கோடிக்கணக்கில் செலவளிப்பது ஜனநாயகத்தை கேலி செய்வதாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News