செய்திகள்

இறுதிக்கட்ட பாராளுமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 53.03 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2019-05-19 11:58 GMT   |   Update On 2019-05-19 11:58 GMT
பாராளுமன்ற தேர்தலில் 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவைவில் உள்ள 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதில் பணப் பட்டுவாடா புகார் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதைதொடர்ந்து, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
 
பிற்பகல் 5 மணி நிலவரப்படி மாநில வாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

8 மாநிலங்களையும் ஒப்பிடுகையில் அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 66.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

அதற்கு அடுத்தபடியாக, மேற்கு வங்காளம் மாநிலத்தில் 64.87 சதவீதம் வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 59.75 சதவீதம் வாக்குகளும், இமாச்சலப்பிரதேசத்தில் 57.43 சதவீதம் வாக்குகளும், சண்டிகரில் 51.18 சதவீதம் வாக்குகளும், பஞ்சாப்பில் 50.49 சதவீதம் வாக்குகளும், பீகாரில் 46.75 சதவீதம் வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் மிகவும் குறைந்தபட்சமாக 47.21 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. 

மேற்கண்ட 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 53.03 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
Tags:    

Similar News