செய்திகள்

இந்திரா காந்தியை போல மோடி தோற்க வேண்டும் - மாயாவதி

Published On 2019-05-19 09:19 GMT   |   Update On 2019-05-19 09:19 GMT
இந்திரா காந்தியை போல பிரதமர் மோடி தோற்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் 1977-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவர் பாரதிய லோக் தளம் கட்சியை சேர்ந்த ராஜ் நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நடந்தது போல இப்போது வாரணாசி தொகுதியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

 


உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அங்குள்ள மக்கள் அனைவரையும் முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத்தும், பிரதமர் நரேந்திர மோடியும் ஏமாற்றி விட்டனர். கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யநாத்தை மக்கள் நிராகரித்தனர்.

பிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும். 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நிகழ்ந்தது இப்போது வாரணாசிதொகுதியில் மீண்டும் நிகழுமா?

குஜராத்தின் வளர்ச்சியை போல கிழக்கு உத்தரபிரதேசத்தின் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை நீக்கவில்லை. மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து வகுப்பு வாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் தூண்டி விடுகின்றன. இது மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News