செய்திகள்

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவது நாட்டுக்கு பேராபத்து: அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2019-05-16 12:20 GMT   |   Update On 2019-05-16 12:46 GMT
தேர்தல் ஆணையம் மோடி பிரசாரத்திற்கு ஆதரவாக செயல்படுவது நாட்டுக்கு பேராபத்து என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பா.ஜனதாவுக்கு சாதகமாக செயல்படுவதாக மாநில கட்சிகள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலும் தேர்தல் ஆணையம் மீது சாடியுள்ளார்.



இந்திய தேர்தல் ஆணையம் குறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘தேர்தல் ஆணையம் மோடியின் பேரணிக்கு அனுமதி அளிக்கிறது. அவரது பேரணிக்குப்பின் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தல் ஆணையம் முழுவதுமாக ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது. இது நாட்டுக்கு மிகப்பெரிய பேராபத்து’’ என்றார்.
Tags:    

Similar News