செய்திகள்

பா.ஜனதாவின் பணம் வேண்டாம், எங்களால் வித்யாசாகர் சிலையை கட்டமைக்க முடியும்: மம்தா பானர்ஜி

Published On 2019-05-16 11:54 GMT   |   Update On 2019-05-16 11:54 GMT
வன்முறையால் சேதம் அடைந்த வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜனதாவின் பணம் வேண்டாம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் இடையே கடும் வன்முறை நேரிட்டது. அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது. சிலையை உடைத்தது பா.ஜனதாவினர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. பா.ஜனதா திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில் கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் என பிரதமர் மோடி கூறினார். வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜனதாவின் பணம் வேண்டாம், எங்களால் வித்யாசாகர் சிலையை கட்டமைக்க முடியும் என மம்தா பதில் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி இதுகுறித்து கூறுகையில் “கொல்கத்தாவில் மீண்டும் வித்யாசாகர் சிலையை கட்டமைத்து தருவதாக மோடி உறுதியளித்துள்ளார். எங்களுக்கு ஏன் பா.ஜனதாவின் பணம்? மேற்கு வங்காளத்திடமே போதுமான வளம் உள்ளது. சிலைகளை சிதைப்பது பா.ஜனதாவின் பழக்கமாகும். அவர்கள் திரிபுராவில் அதைதான் செய்தார்கள்.



பா.ஜனதா மேற்குவங்காளத்தின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை சிதைத்துள்ளது. இதுபோன்ற ஒருகட்சியை ஆதரிப்பவர்களையும் இந்த சமூகம் ஏற்காது. சமூக வலைதளங்களில் போலியான செய்தியை பரவச்செய்து பா.ஜனதா வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது” என்றார்.
Tags:    

Similar News