செய்திகள்

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் களமிறங்கிய தாதா திடீர் விலகல்

Published On 2019-05-13 20:16 GMT   |   Update On 2019-05-13 20:16 GMT
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தேர்தல் களத்தில் களமிறங்கிய தாதா ஆதிக் அகமது தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

வாரணாசி:

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் மோடியை எதிர்த்து ஆதிக் அகமது என்ற பிரபல தாதாவும் களமிறங்கினார். தற்போது பிரயாக்ராஜ் நகரில் உள்ள நைனி சிறையில் இருக்கும் அவர் வாரணாசி தொகுதியில் வேட்புமனுவும் தாக்கல் செய்திருந்தார். சுயேச்சையாக நின்ற அவருக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.

இந்தநிலையில் தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக ஆதிக் அகமது நேற்று திடீரென அறிவித்தார். இது தொடர்பாக சிறையில் இருந்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு பிரசாரம் செய்ய பரோல் வழங்காததால் போட்டியில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார்.

முன்னதாக தேர்தல் பிரசாரத்துக்காக பரோல் வழங்க வேண்டும் என உள்ளூர் கோர்ட்டு மற்றும் அலகாபாத் ஐகோர்ட்டு போன்றவற்றில் ஆதிக் அகமது மனு செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்களை 2 கோர்ட்டுகளும் தள்ளுபடி செய்தன. இதனால் தனக்கு ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு இருப்பதாக தனது கடிதத்தில் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
Tags:    

Similar News