செய்திகள்

மோடியை திருடன் என கூறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு- பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் ராகுல்

Published On 2019-05-08 06:24 GMT   |   Update On 2019-05-08 06:24 GMT
பிரதமர் மோடியை திருடன் என கூறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ள ராகுல் காந்தி, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். #MeenakshiLekhi #RahulGandhi #ContemptCase #ChowkidaarChorHai
புதுடெல்லி:

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால், ராகுல் காந்திக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையின்போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஆனால், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி ராகுல் காந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த பதிலும் நீதிபதிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என கண்டித்தனர். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பது தொடர்பாக புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி தரப்பில் 3 பக்கங்கள் கொண்ட புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மோடியை திருடன் என நீதிபதி கூறியதாக பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறப்பட்டுள்ளது. #MeenakshiLekhi #RahulGandhi #ContemptCase #ChowkidaarChorHai
Tags:    

Similar News