செய்திகள்

மேற்குவங்காள தேர்தலில் வன்முறை - நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு

Published On 2019-05-07 10:19 GMT   |   Update On 2019-05-07 10:19 GMT
மேற்கு வங்காளத்தில் ஐந்தாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட வன்முறை நிகழ்ச்சிகளுக்கு நடவடிக்கை எடுக்க கோரி நாளிதழ்கள் ஆசிரியர் சங்கம் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. #LokSabhaElections2019 #TMC #EditorsGuild
கொல்கத்தா:

பாராளுமன்ற தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்காளம் மாநிலத்திலும் ஐந்தாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

அப்போது செய்தி சேகரிக்க சென்ற பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் ஐந்தாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட வன்முறை நிகழ்ச்சிகளுக்கு நடவடிக்கை எடுக்க கோரி நாளிதழ்கள் ஆசிரியர் சங்கம் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

மேற்கு வங்காளத்தில் நேற்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட தேர்தலின்போது, பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது. இதற்கு காரணமான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது #LokSabhaElections2019 #TMC #EditorsGuild
Tags:    

Similar News