செய்திகள்

நைஜீரியாவில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க சுஷ்மா நடவடிக்கை

Published On 2019-05-07 09:42 GMT   |   Update On 2019-05-07 11:11 GMT
இந்தியாவை சேர்ந்த 5 கப்பல் பணியாளர்கள் நைஜீரியாவில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். #Indiansailors #Indiansailorsabducted #SushmaSwaraj
புதுடெல்லி:

நைஜீரியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த சிலர் அந்நாட்டு கடல்  பகுதியை வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் கடந்து செல்லும்போது கப்பலுடன் அதில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியாளர்களை சிறைபிடித்து விடுகின்றனர்.

அவர்களை பணயக் கைதியாக பயன்படுத்தி பணம் பறித்து அதை ஆயுதங்கள் வாங்குவதற்காக பயன்படுத்துகின்றனர். கேட்ட தொகை கிடைக்காதபட்சத்தில் பிடிபட்ட சிலரை பயங்கரவாதிகள் ஈவிரக்கமின்றி கொன்று விடுவதும் உண்டு.



அவ்வகையில், இந்தியாவை சேர்ந்த 5 கப்பல் பணியாளர்கள் நைஜீரியாவில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட செய்திகள் சமீபத்தில் வெளியாகின.

இந்நிலையில்,  அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு நைஜீரியாவில் உள்ள இந்திய தலைமை தூதரை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று வலியுறுத்தியுள்ளார். நைஜீரியா நாட்டு அரசின் உயரதிகாரிகளுடன் இதுதொடர்பாக உடனடியாக தொடர்புகொண்டு, பிடிபட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளன? என்பது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்குமாறு நைஜீரியாவுக்கான இந்திய தலைமை தூதர் அபய் தாக்குர்-ஐ அவர் கேட்டுக் கொண்டுள்ளார். #Indiansailors #Indiansailorsabducted #SushmaSwaraj

Tags:    

Similar News