செய்திகள்

சித்தராமையாவுடன் மந்திரிகள் சந்திப்பு: இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை

Published On 2019-05-04 01:51 GMT   |   Update On 2019-05-04 01:51 GMT
பெங்களூருவில் சித்தராமையாவை மந்திரிகள் சந்தித்து பேசினர். அப்போது இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினர். #Siddaramaiah
பெங்களூரு :

கர்நாடகத்தில் காலியாக உள்ள குந்துகோல், சிஞ்சோலி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் குந்துகோல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் குசுமாதேவி சிவள்ளி, பா.ஜனதா சார்பில் சிக்கனகவுடர், சிஞ்சோலியில் காங்கிரஸ் சார்பில் சுபாஷ் ராத்தோடு, பா.ஜனதா சார்பில் அவினாஷ் ஜாதவ் ஆகியோர் உள்பட மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

இந்த 2 தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்தவை ஆகும். அதனால் அந்த தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள அக்கட்சி தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. காங்கிரசிடம் இருந்து அந்த தொகுதிகளை கைப்பற்றி, சட்டசபையில் தங்களின் பலத்தை அதிகரித்துக்கொள்ள பா.ஜனதா வியூகம் வகுத்துள்ளது.

இந்த சட்டமன்ற இடைத்தேர்தல் இரு கட்சிகளுக்கும் மிக முக்கியமானவை ஆகும். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், வனத்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.

அவர்கள், இரு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினர். குந்துகோல் தொகுதி பொறுப்பாளர்களாக மந்திரிகள் டி.கே.சிவக்குமார் மற்றும் சதீஸ் ஜார்கிகோளி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Siddaramaiah
Tags:    

Similar News