செய்திகள்
கோப்புப்படம்

ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு ஓடிய நிரவ் மோடியின் 11 கார்கள் ஏலம்

Published On 2019-04-26 07:27 GMT   |   Update On 2019-04-26 07:27 GMT
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு லண்டனுக்கு தப்பிய ஓடிய நிரவ் மோடிக்கு சொந்தமான 11 கார்களை ஏலம் விட அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர். #NiravModi
மும்பை:

பிரபல தொழில் அதிபர்கள் நிரவ்மோடி, மொகுல் சோக்சி இருவரும் பஞ்சாப் நேர‌ஷனல் வங்கி உள்பட பல வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர்.

அவர்கள் இருவரும் போலி ஆவணங்கள் மூலம் ரூ.13 ஆயிரத்து 570 கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து நிரவ்மோடி, மெகுல் சோக்சி இருவரின் நவீன பங்களாக்கள் முடக்கப்பட்டன. மேலும் அவர்களது அசையும், அசையா சொத்துக்களையும் அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.

அந்த வகையில் நிரவ் மோடியின் 11 சொகுசு கார்கள் முடக்கப்பட்டன. மெகுல் சோக்சியின் 2 சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சொத்துக்களை விற்று அமலாக்கத்துறையினர் பணம் திரும்ப பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி இருவரின் 13 சொகுசு கார்களையும் ஏலம் விட்டு பணம் திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 13 சொகுசு கார்களும் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அரசின் எம்.எஸ்.டி.சி. நிறுவனம் இதற்கான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு காரின் ரகம் மற்றும் அதன் விலையும் அதில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட தினங்களுக்குள் அதிக விலையை பதிவு செய்பவர்களுக்கு அந்த கார்கள் ஏலத்தின் அடிப்படையில் கிடைக்கும்.

13 சொகுசு கார்கள் மூலம் மொத்தம் ரூ.3.29 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் சூடு பிடித்தால் கூடுதல் தொகையை திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நிரவ் மோடியின் பெயிண்டிங்குகள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் வருமான வரித்துறைக்கு ரூ.54 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தக் கட்டமாக நிரவ் மோடியின் சொகுசு பங்களாக்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. #NiravModi
Tags:    

Similar News