செய்திகள்

மோடியின் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை - மாயாவதி குற்றச்சாட்டு

Published On 2019-04-26 00:24 GMT   |   Update On 2019-04-26 00:24 GMT
பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். #PMModi #ElectionCommission #Mayawati
லக்னோ:

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி தொடர்ந்து பலமுறை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார் கூறப்பட்டாலும், அவர் சுதந்திரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்திய தேர்தல் கமிஷனுக்கு நன்றி. அதனாலேயே அவர் பெண்களுக்கு மரியாதை கொடுக்க தவறுவது முதல் பல்வேறு எல்லைகளையும் கடந்துவருகிறார். பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டின் மீது ஒரு ஒப்பற்ற தலைவரை திணித்துள்ளது அல்லவா?



பா.ஜனதா கட்சியும் அதன் கம்பெனியும் எதிர்க்கட்சியில் பிரதமர் பதவிக்கு யார்? என்று கேட்டு மக்களை தொடர்ந்து அவமதித்து வருகிறது. முன்புகூட நேருவுக்கு பின்னர் யார் என்ற திமிரான கேள்வி எழுந்தது. ஆனால் மக்கள் இதுபோன்ற அர்த்தமற்ற கேள்விக்கு சரியான பதிலடியை திருப்பி கொடுப்பார்கள். வெகு விரைவில் வேறு ஒருவரை அவர்கள் நிச்சயமாக கொடுப்பார்கள்.

இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.  #PMModi #ElectionCommission #Mayawati
Tags:    

Similar News