செய்திகள்

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வயநாடு வீரர் குடும்பத்தாருக்கு பிரியங்கா ஆறுதல்

Published On 2019-04-21 13:19 GMT   |   Update On 2019-04-21 13:19 GMT
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வயநாட்டை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் வசந்தகுமார் குடும்பத்தாரை இன்று சந்தித்த பிரியங்கா காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். #PriyankaGandhimeets #Pulwamaattack
திருவனந்தபுரம்:

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ் மீது கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள்.
 
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற வீரரும் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். பலியான வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 

இந்நிலையில், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, இன்று மக்கம்குன்னு பகுதியில் உள்ள மறைந்த சி.ஆர்.பி.எப். வீரர் வசந்த குமார் இல்லத்துக்கு சென்றார். வசந்த குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

கேரளாவில் முதல்முறையாக ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின மாணவி ஸ்ரீதன்யா சுரேஷ்-ஐயும் அங்கு சந்தித்த பிரியங்கா, அவருக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார். #PriyankaGandhi #PriyankaGandhimeets #Pulwamaattack #VVVasanthaKumar #WayanadVVVasanthaKumar 
Tags:    

Similar News