செய்திகள்

லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Published On 2019-04-10 06:50 GMT   |   Update On 2019-04-10 06:50 GMT
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி, லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #LaluPrasadYadav #FodderScam
புதுடெல்லி:

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் தண்டனை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வயது மூப்பு, நீரிழிவு நோய் உள்ளிட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தற்போது ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தன் மீதான வழக்குகளில் ஒரு வழக்கில் ஏற்கெனவே ஜாமீன் பெற்ற லாலு, 3 வழக்குகளில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லாலு மேல்முறையீடு செய்தார்.



இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் மற்றும் சிபிஐ தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, லாலுவின் ஜாமீன் விஷயத்தில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி லாலுவின் ஜாமீன் மனுவை நிராகரித்தனர். #LaluPrasadYadav #FodderScam

Tags:    

Similar News