செய்திகள்

பெங்களூருவில் பலத்த மழை

Published On 2019-04-09 06:54 GMT   |   Update On 2019-04-09 06:54 GMT
பெங்களூருவில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. #heavyrain

பெங்களூரு:

கடந்த சில நாட்களாக பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், பெங்களூருவில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது.

சாந்தி நகர், ராஜாஜி நகர், மல்லேஸ்வரம், பி.டி.எம். லேஅவுட், எச்.எஸ்.ஆர். லேஅவுட், மெஜஸ்டிக், காந்தி நகர், சிவாஜி நகர், அல்சூர், மடிவாளா, மகாலட்சுமி லேஅவுட், கோரமங்களா, வில்சன்கார்டன், மாகடி சாலை, பசவவேஸ்வர நகர், எச்.ஏ.எல். சாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை தொடர்ந்து பெய்ததால், சாலைகளில் வெள்ளம்போல தண்ணீர் தேங்கியது. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த மக்கள் இன்னலுக்கு உள்ளானார்கள்.

சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து தடைபட்டது. பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக் கணக்கில் காத்திருக்க நேர்ந்தது. இதனால் வீடுகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். #heavyrain

Tags:    

Similar News