செய்திகள்

பயங்கரவாதம் ஒரு பிரச்சனை இல்லையெனில், ராகுலுக்கு பாதுகாப்பு எதற்கு? - சுஷ்மா சுவராஜ்

Published On 2019-04-06 04:12 GMT   |   Update On 2019-04-06 04:12 GMT
பயங்கரவாதம் ஒரு பிரச்சனை இல்லையென்றால், ராகுல் காந்திக்கு பாதுகாப்பு எதற்கு என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். #SushmaSwaraj #RahulGandhi
ஐதராபாத்:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சியினரும் பொதுக்கூட்டம், பிரசாரம், மற்றும் வேட்புமனு தாக்கல் போன்ற பல்வேறு பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இதையடுத்து மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசியதாவது:

ராகுல் காந்தி பேட்டியின் போது, நாட்டில் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது வேலையின்மை தான், பயங்கரவாதம் இல்லை என கூறினார். அவர் கூறுவதை போல்,  நாட்டில் பயங்கரவாதம் ஒரு பிரச்சனை இல்லை என்றாலும், அனைத்து பயங்கரவாதமும் முழுமையாக  செயலிழந்து விட்டது என்றாலும், ராகுலுக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாவலர்கள் எதற்கு?



முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையும் ஆன ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது முதல், இன்று வரை அவரது குடும்பத்தில் அனைவருக்கும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாவலர்கள், எங்கு சென்றாலும் வருகின்றனர். மேலும் ராகுல் காந்தி செல்லும் அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

எனவே இதனை ராகுலிடம் கூற விரும்புகிறேன். பயங்கரவாதம் அழிந்து விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் நீங்கள், எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை என கருதினால் உடனடியாக 'எங்களின் பாதுகாப்பிற்கென சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாவலர்கள் வேண்டாம்' என எழுதி தந்து விடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #SushmaSwaraj #RahulGandhi
Tags:    

Similar News