செய்திகள்

பெங்களூருவில் கட்டுமானப் பணி நடந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி

Published On 2019-04-05 10:21 GMT   |   Update On 2019-04-05 10:21 GMT
பெங்களூருவில் கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். #BuildingCollapse
பெங்களூரு:

பெங்களூருவின் யஷ்வந்த்பூர் பகுதியில் உள்ள  வேளாண் பொருட்கள் உற்பத்தி குழுவின் நிலத்தில்  கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதில்  10 அடுக்கு மாடி கட்ட திட்டம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கார், பைக் போன்ற வாகனங்களை நிறுத்தும் தளமும் அமைக்கப்படவிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு தங்கியிருந்த பணியாளர்களான பீகாரைச் சேர்ந்த ராகேஷ்(25), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராகுல் கோசுவாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  பலியாகினர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் யாட்கீரைச் சேர்ந்த அனுமந்து (29) கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் கட்டிடத்தின் கான்டிராக்டர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கட்டுமானப்பணி நடைபெற்ற கட்டிடம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #BuildingCollapse

Tags:    

Similar News