செய்திகள்

ராபர்ட் வதேரா முன்ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு

Published On 2019-03-28 20:30 GMT   |   Update On 2019-03-28 20:30 GMT
லண்டனில் சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் ராபர்ட் வதேராவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஏப்ரல் 1-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி தீர்ப்பளித்தார். #RobertVadra #AnticipatoryBail
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய டெல்லி சிறப்பு கோர்ட்டு 27-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்தது.

அந்த கெடு முடிந்ததால் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் இது தொடர்பாக எந்த முடிவையும் நீதிபதி அரவிந்த் குமார் நேற்று எடுக்கவில்லை.

அதேசமயம் ராபர்ட் வதேராவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஏப்ரல் 1-ந் தேதி பிறப்பிப்பதாக கூறி அன்றைய தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். #RobertVadra #AnticipatoryBail 
Tags:    

Similar News