செய்திகள்

எங்களது போர் காஷ்மீருக்கானது, காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல - பிரதமர் மோடி பேச்சு

Published On 2019-02-23 12:28 GMT   |   Update On 2019-02-23 12:28 GMT
ராஜஸ்தானின் டோங்க் என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்களது போர் காஷ்மீருக்கானது, காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார். #PMModi
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் உள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் 100 மணி நேரத்திற்குள் பழிவாங்கியது. காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத்தால், 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அமைதியை தான் விரும்புகின்றனர்.

காஷ்மீர் மாணவர்களை தாக்குவது போன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது. எங்களது போர் காஷ்மீருக்கானது மட்டுமே. காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல.



பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத்தான் நாம் போராடி வருகிறோம். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

எல்லைப்பகுதியில் உள்ள வீரர்கள் மீதும் மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். உரிய நேரத்தில் எல்லா கணக்கையும் தீர்த்து விடலாம் என தெரிவித்துள்ளார். #PMModi
Tags:    

Similar News