செய்திகள்

ஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்

Published On 2019-02-17 11:24 GMT   |   Update On 2019-02-17 11:24 GMT
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று 3 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்த பிரதமர் மோடி 3,306 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். #PMinaugurates #ModiinJharkhand
ராஞ்சி:

பீகார் மாநிலத்தில் இன்று காலை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி  பிற்பகல் 3 மணியளவில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு வந்தார்.

ஹசாரிபாக் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் ரிமோட் மூலம் ஹசாரிபாக், தும்கா, பாலமு பகுதிகளில் 3 மருத்துவ கல்லூரிகளை திறந்துவைத்த மோடி, ஹசாரிபாக், தும்கா, பாலமு மற்றும் ஜாம்டெட்பூர் நகரங்களில் தலா 500 படுக்கை வசதியுடன் கூடிய 4 அரசு மருத்துவமனைகளுக்கும் அடிக்கல் நாட்டினார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் சாவிகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.



ராம்கர் மற்றும் ஹசாரிபாக் மாவட்டத்தில் 4  குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் மேலும் 6 குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய நிகழ்ச்சியில் மொத்தம் 3,306 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். #PMinaugurates #ModiinJharkhand
Tags:    

Similar News