செய்திகள்

டெல்லி செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம்- மோடி திறந்து வைத்தார்

Published On 2019-01-23 09:14 GMT   |   Update On 2019-01-23 09:14 GMT
டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜாலியன்வாலாபாக் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். #Modiinaugurates #Bosemuseum #Jallianwalamuseum #RedFort
புதுடெல்லி:

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோவில் அமைந்துள்ள அம்ரித்சர் நகரில் ஜாலியன் என்ற இடத்தில் 13-4-1919 அன்று ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் வெள்ளையர்களின் ராணுவம் பீரங்கிகளால் சுட்டதில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்திய வரலாற்றில் கருப்புதினமாக பதிவான இந்த நாளை நினைவுகூரும் விதமாகவும், இந்திய தேசிய ராணுவம் என்ற படைப்பிரிவை ஏற்படுத்தி நாட்டின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை தொடங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளான இன்று அவரது நினைவை போற்றும் வகையிலும் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க  செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஜாலியன்வாலாபாக் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.


இந்த அருங்காட்சியகத்தில் முதலாம் உலகப்போர் தொடர்பான சிறப்பு புகைப்படங்களும், முதலாம் உலகப்போரின்போது கவிக்குயில் சரோஜினி நாயுடு இயற்றிய எழுச்சிகீதமும் இடம்பெற்றுள்ளது.

இவற்றை திறந்துவைத்த பிரதமர் மோடி இங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு நினைவுக்குறிப்புகளை சுமார் ஒருமணி நேரம் பார்வையிட்டார். #Modiinaugurates #Bosemuseum #Jallianwalamuseum #RedFort

Tags:    

Similar News