செய்திகள்

சோனியாவின் ரேபரேலி பயணம் ரத்து - அமேதியில் நாளை ராகுல் சுற்றுப்பயணம்

Published On 2019-01-22 13:37 GMT   |   Update On 2019-01-22 13:37 GMT
உ.பி.யில் ரேபரேலி தொகுதி பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரத்துசெய்துள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு நாளை சுற்றுப்பயணம் செல்கிறார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
லக்னோ: 

வரும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல், உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும்.

இதற்கிடையே, காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தங்களது பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.



இந்நிலையில், உ.பி.யின் ரேபரேலி தொகுதி பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரத்துசெய்துள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு நாளை முதல் சுற்றுப்பயணம் செல்கிறார்.

இதுதொடர்பாக, உ.பி. மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜிஷான் ஹைடர் கூறுகையில், தவிர்க்க முடியாத காரணங்களால் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டபடி அமேதி தொகுதியில் நாளை முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார், அங்கு பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபடவுள்ளார் என தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
Tags:    

Similar News