செய்திகள்

எதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது - மோடி பேச்சு

Published On 2019-01-20 10:30 GMT   |   Update On 2019-01-20 10:30 GMT
பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரண்டுள்ள எதிர்க்கட்சிகளை நிலையற்ற, ஊழல்வாதிகள் கூட்டணி என்று குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் தங்களிடம் ஜனசக்தியும் உள்ளதாக குறிப்பிட்டார். #Mahagathbandhan #allianceofcorruption #Modi
புதுடெல்லி:

கோவாவில் உள்ள 5 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடாக பா.ஜ.க.வை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுடன் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் பேசினார்.

நவீன கோவாவை வடிவமைக்கும் சிற்பியும் எனது நண்பருமான கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் விரைவில் பூரண நலமடையை பிரார்த்தித்து கொள்கிறேன். இந்த நிலையிலும் அவர் பணியாற்றி வருவது நமக்கெல்லாம் ஊக்கசக்தியாக உள்ளது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் எப்படியும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் எதிர்க்கட்சியினர் இப்போதே வாக்குப்பதிவு இயந்திரங்களை வில்லனாக சித்தரித்து பேசி வருகின்றனர். முன்னர் வாக்குச்சீட்டு தேர்தல் முறையை எதிர்த்தவர்கள் இப்போது தங்களது நிறத்தை மாற்றிகொண்டு  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூற தொடங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஊழல், எதிர்மறை ஆகிய சக்திகளின் நிலையற்ற கூட்டணியாகும். எதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் நம்மிடம் ஜனசக்தியும் உள்ளது என மோடி குறிப்பிட்டார். #Mahagathbandhan #allianceofcorruption #Modi
Tags:    

Similar News