செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: உ.பி.யில் 72 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க. வெற்றிபெறும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை

Published On 2019-01-14 15:06 GMT   |   Update On 2019-01-14 15:06 GMT
பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 72 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #BJPwillwin #RajnathSingh #Parliamentpolls
புதுடெல்லி:

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் முன்னாள் ஆளும்கட்சிகளான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன.

அம்மாநிலத்தின் மொத்த பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆக உள்ள நிலையில் இருகட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தப்படி பகுஜன் சமாஜ் கட்சிக்கு 38 இடங்களும், சமாஜ்வாடி கட்சிக்கு 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னர் எலியும் பூனையுமாக இருந்த இவ்விரு கட்சிகளும் பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இன்று மாலை பதிலளித்த ராஜ்நாத் சிங் கடந்த 2017-ம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் சட்டசபை தேர்தலின்போது என்ன நடந்தது என்பதை அவர்கள் மறந்து விட்டார்களா? 

யார் வேண்டுமானாலும், எத்தனை கூட்டணிகள் வேண்டுமானாலும் அமைத்து கொள்ளட்டும். வரும் தேர்தலில் இங்குள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் 72  இடங்களுக்கு குறையாமல் பா.ஜ.க. வெற்றிபெறும் என குறிப்பிட்டார். #BJPwillwin #RajnathSingh #Parliamentpolls
Tags:    

Similar News