செய்திகள்

தனியார் துறைகளில் இருந்து 169 பாலியல் தொல்லை புகார்கள் பதிவு - மத்திய அரசு தகவல்

Published On 2019-01-14 00:37 GMT   |   Update On 2019-01-14 00:37 GMT
2017-ம் ஆண்டு முதல் இதுவரை 169 பாலியல் தொல்லை புகார்களை தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அனுப்பி உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. #PrivateIndustries
புதுடெல்லி:

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து ‘சீ பாக்ஸ்’ என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில், 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 169 பாலியல் தொல்லை புகார்களை தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அனுப்பி உள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகபட்சமாக 33 புகார்களும், டெல்லியில் இருந்து 23 புகார்களும் பதிவாகி இருப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அதேபோல் அரசு துறைகளில் இருந்தும் புகார்கள் வந்து இருக்கின்றன. நிதித்துறையில் இருந்து 21 புகார்களும், தகவல் தொடர்பு துறையில் இருந்து 16 புகார்களும் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News