செய்திகள்

திமுகவை மோடி அழைக்கவில்லை- தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

Published On 2019-01-11 08:01 GMT   |   Update On 2019-01-11 08:01 GMT
பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பதற்கு திமுகவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #ParliamentElection #TamilisaiSoundararajan
புதுடெல்லி:

தமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழியில் பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், பழைய நண்பர்களையும் இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இதனால் கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என்றும், பிரதமர் மோடி, வாஜ்பாயும் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.



மு.க.ஸ்டாலின் அறிவிப்பு பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், ‘கூட்டணிக்கு திமுகவை பிரதமர் மோடி அழைக்கவில்லை’ என்றார்.

“தமிழகத்தில் கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று மோடி கூறியது திமுகவுக்கு அல்ல. வாஜ்பாய் பாணியில் கூட்டணி என்பதை திமுகவுக்கு விடுத்த அழைப்பாக ஸ்டாலின் ஏன் எடுத்துக்கொண்டார்?” என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார். #ParliamentElection #TamilisaiSoundararajan
Tags:    

Similar News