செய்திகள்

10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் ஆபத்தானது - அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2019-01-09 13:27 GMT   |   Update On 2019-01-09 13:27 GMT
பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #parliament #10percentreservation #Arvindkejriwal
புதுடெல்லி:

பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் நேற்று தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா தாக்கல் செய்யப்பட்டது.



இந்நிலையில் பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

"10% இட ஒதுக்கீடு வழங்குவது மிகவும் ஆபத்தானது. ஏழைகளுக்கு உதவுவதை இலக்காகக் கொள்ளவில்லை. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்கான சதித்திட்டம், அரசின் இந்த முடிவுக்கு பின்னால் ஒளிந்திருப்பதாக" கூறியுள்ளார். #parliament #10percentreservation #Arvindkejriwal
Tags:    

Similar News