செய்திகள்

குக்கர் சின்னம் கேட்டு தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published On 2019-01-02 09:15 GMT   |   Update On 2019-01-02 09:15 GMT
திருவாரூர் இடைத்தேர்தலில், அ.ம.மு.க.விற்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #SupremeCourt #TTVDhinakaran #Cooker
புதுடெல்லி:

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருக்கும் தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாக இருக்கிறார். அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

அவரது ஆதரவாளர்கள் குக்கர்களை கையில் ஏந்திய படி பிரசாரம் செய்தது பெரும் வரவேற்பைபெற்றது. அ.தி.மு.க, தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் தினகரன் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று அவர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.


அத்துடன் திருவாரூர் தொகுதியில் தனது கட்சி வேட்பாளர் குக்கர் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தினகரன் விருப்பம் தெரிவித்து உள்ளார். குக்கர் சின்னமானது சுயேட்சை சின்னம் என்பதால் தேர்தலின் போது வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது என்றும், தனது கட்சிக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில் அவர் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க.த்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் கமி‌ஷனுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார். அது ஏற்கப்படவில்லை. இந்த மனு வருகிற 7-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? என்பது தெரியவரும். #SupremeCourt #TTVDhinakaran #Cooker
Tags:    

Similar News