செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் - விஸ்வ இந்து பரிஷத்துக்கு பா.ஜ.க. ஆதரவு

Published On 2018-12-09 10:22 GMT   |   Update On 2018-12-09 10:22 GMT
அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவது தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் நடத்திவரும் தர்மசபைக்கு பா.ஜ.க.வின் ஆதரவு உண்டு என உ.பி. துணை முதல்வர் தெரிவித்துள்ளார். #BJPsupportsVHP #VHPDharamSabha #Ramtemple
லக்னோ:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் இன்று மாபெரும்  பேரணியும், ராம்லீலா மைதானத்தில் தர்மசபை மாநாடு நடைபெறுகிறது. நாடுமுழுவதும் இருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர்வரை இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த பேரணியில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் விஷ்ணு சதாசிவ் கோக்ஜே, சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் தலைவர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.

இந்நிலையில், அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவது தொடர்பாக டெல்லியில் இன்று விஸ்வ இந்து பரிஷத் நடத்திவரும் தர்மசபைக்கு பா.ஜ.க.வின் ஆதரவு உண்டு என உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
வெளியாகாத வகையில் காங்கிரஸ் தாமதப்படுத்தி வருவதாக குறிப்பிட்ட மவுரியா, அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் அமைவதை நாட்டில் உள்ள அனைவரும் விரும்புகின்றனர். இதற்காக விஸ்வ இந்து பரிஷத் டெல்லியில் நடத்தும் தர்மசபை கூட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. இதை பா.ஜ.க. ஆதரிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார். #BJPsupportsVHP #VHPDharamSabha #Ramtemple
Tags:    

Similar News