செய்திகள்

டிசம்பர் 10-ம் தேதி மியான்மர் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Published On 2018-12-04 09:58 GMT   |   Update On 2018-12-04 09:58 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 10-ம் தேதி முதல் 5 நாட்கள் மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். #IndianPresident #RamNathKovind #PresidentVisit
புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 10-ம் தேதி மியான்மர் செல்கிறார். மியான்மரில் 14-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அந்நட்டின் அதிபர் வின் மியின்ட் மற்றும் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.



இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், மியான்மருடனான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியாவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்ய உள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் இரு நாடுகளின் தலைவர்களும் மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ உறவுகள் வலுவடைந்துள்ளது. ராணுவம் மற்றும் கடற்படை வீரர்களின் கூட்டுப் பயிற்சியும் நடைபெற்றுள்ளது. #IndianPresident #RamNathKovind #PresidentVisit

Tags:    

Similar News