செய்திகள்

அனுமன் குறித்து சர்ச்சை பேச்சு: யோகி ஆதித்யநாத் மீது தேர்தல் கமிஷனில் புகார்

Published On 2018-11-30 00:38 GMT   |   Update On 2018-11-30 00:38 GMT
அனுமன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். #YogiAdityanath #Hanuman #Congress
ஜெய்ப்பூர்:

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உத்தரபிரதேச முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளருமான யோகி ஆதித்யநாத் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

நேற்று முன்தினம் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ‘அனுமன் ஒரு தலித்’ என கூறியதாக தெரிகிறது. இது மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அத்துடன் தேர்தல் கமிஷனிலும் புகார் செய்யப்பட்டது.



அமைதி மற்றும் மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யோகி ஆதித்யநாத் பேசியதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆனந்த் குமாரிடம் காங்கிரசார் நேற்று புகார் அளித்தனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசி தேர்தல் நடத்தை விதிகளை மீறி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.  #YogiAdityanath #Hanuman #Congress
Tags:    

Similar News