செய்திகள்

செம்மரக்கடத்தல் வழக்கில் கைதான 9 தமிழர்களுக்கு 8 ஆண்டு சிறை - சித்தூர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2018-11-27 06:51 GMT   |   Update On 2018-11-27 06:51 GMT
செம்மரக்கடத்தல் வழக்கில் கைதான 9 தமிழர்களுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து சித்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #RedSandalwood #SmugglingCase
திருமலை:

ஆந்திர மாநிலம், சித்தூர் தாலுகா போலீசார், கடந்த 2016-ம் ஆண்டு செம்மரக்கடத்தியதாக 5 பேரை கைது செய்தனர். இதேபோல் 2017-ம் ஆண்டு செம்மரம் கடத்தல் வழக்கில் 4 பேரை கைது செய்தனர். இந்த 9 பேர் மீதான வழக்கு விசாரணை சித்தூர் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமார் விவேக் வழக்கை விசாரித்து, புதுக்கோட்டை மாவட்டம், முலம்பட்டியை சேர்ந்த வீரமகாமணி (35), ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த சங்கர் (40), பாலமுருகன் (35), சேலம் மாவட்டம், கருமந்துரையை சேர்ந்த மதன் (49), ஈரோடு மாவட்டம், சுல்தான்பேட்டையை சேர்ந்த முகமது ரபி (38), தர்மபுரி மாவட்டம், பெரியபுதூரை சேர்ந்த சிவக்குமார் (34), ரமேஷ் (24), முருகன் (48), லட்சுமண் (39) ஆகிய 9 பேருக்கும் 8 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சித்தூர் சிறையில் அடைத்தனர். இவர்கள் 9 பேருக்கும் ஆந்திர மாநில புதிய வனச்சட்டத்தின்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RedSandalwood #SmugglingCase

Tags:    

Similar News