செய்திகள்

தனித்தொகுதி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

Published On 2018-11-14 03:35 GMT   |   Update On 2018-11-14 03:35 GMT
தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்கான சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக்கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. #SC #ReservedConstituency #MLAsdisqualification
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் ஐ.கண்ணன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கான தனித்தொகுதிகளில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இந்த தகுதிநீக்கம் அரசியல் சட்டப்பிரிவுகள் 101-ஏ மற்றும் 109-ஏ அடிப்படையில் செய்துள்ளதாக தெரிகிறது.

தனித்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது தவறானது ஆகும். இது அவர்களின் உரிமைக்கு எதிரானதாக அமைந்துள்ளது. எனவே, இந்த சட்டப்பிரிவுகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். #SC #ReservedConstituency #MLAsdisqualification
Tags:    

Similar News