செய்திகள்

உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 6 பேர் பலி

Published On 2018-09-21 07:54 GMT   |   Update On 2018-09-21 07:54 GMT
அசாம் மாநிலத்தில் உள்ள குளம் ஒன்றில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற உள்ளூர்வாசிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Assam
திஸ்பூர்:

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் 11 ஆயிரம் வோல்ட் மின் அழுத்தம் பாயும் உயர் மின் அழுத்தக்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. மின்சாரம் பாய்வதால் குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது.

இதையடுத்து, மின்சாரம் தடை செய்யப்பட்டது என நம்பி அப்பகுதியைச் சேர்ந்த 78 பேர் குளத்தில் மீன் பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது திடீரென அந்த மின்கம்பி வழியே மின்சாரம் பாய்ந்து குளத்தில் இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

அவர்களை அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்த அம்மாநில முதல் மந்திரி சர்பனந்தா சோனோவால், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். #Assam
Tags:    

Similar News