ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ரெயில்வே தண்டவாளங்களை வாகன போக்குவரத்துக்காக அம்மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். #Rajasthan
ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோல்பூர் மாவட்டத்தில் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், ரெயில்வே தண்டவாளங்களில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். வெள்ளம் ஓடும் பகுதிக்கு மேலே இந்த ரெயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மூலம் ஆபத்தான பயணத்தை அப்பகுதி மக்கள் மேற்கொள்கின்றனர். #Rajasthan