குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தனது 3 வயது மகனை ஆட்டோ மீது தூக்கி அடித்த தந்தையில் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் 3 வயது மகனை ஆட்டோவில் தூக்கி அடித்த தந்தை - புகாரளிக்க மனைவி மறுப்பு
பதிவு: ஜூலை 10, 2018 08:35
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே வசிக்கும் நபர் ஒருவர் நேற்று குடிபோதையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 3 வயது மகனை அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது வேகமாக தூக்கி அடித்தார். மேலும், தலைகீழாக சிறுவனை பிடித்த நிலையில், தனது மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர தந்தைக்கு எதிராக புகாரளிக்க மனைவி மறுத்து விட்டதாகவும், போலீசார் தாமாக முன்வந்து சிறார் வன்கொடுமை சட்டத்தில் தந்தை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றவாளி தலைமறைவாகிவிட்டதாகவும், குழந்தை தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.