தொடர்புக்கு: 8754422764

பாராளுமன்ற தேர்தல் - அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த பாஜக வேட்பாளர்

குஜராத்தை சேர்ந்த பாஜக வேட்பாளர் சி.ஆர்.பாட்டீல், பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பதிவு: மே 25, 2019 09:15

பாராளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜனதாவை சேர்ந்த 145 எம்.பி.க்கள் தங்கள் பதவியை மீண்டும் உறுதி செய்திருக்கின்றனர்.

பதிவு: மே 25, 2019 08:46

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சர்ச்சை வேட்பாளர்கள்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், சமாஜ்வாடி வேட்பாளராக அசம்கான் உள்ளிட்ட சர்ச்சை வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.

பதிவு: மே 25, 2019 08:39

2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது

பாராளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது.

பதிவு: மே 25, 2019 06:55

மலையாளத்தில் நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

கேரள மாநிலம் வயநாட்டில் அவர் மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி கேரள மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்தார்.

பதிவு: மே 25, 2019 06:26

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது - ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு?

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தன்னுடைய பதவி ராஜினாமா முடிவை அறிவிப்பார் என பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: மே 25, 2019 04:33

ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கப்பிரிவு மனு தாக்கல்

ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கப்பிரிவு தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 25, 2019 01:22

வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை

வங்கதேசத்தை சேர்ந்த ‘ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்காளதேசம்’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பதிவு: மே 25, 2019 00:28

பாராளுமன்ற தேர்தல் - பாஜக 303 இடங்களில் அபார வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக 303 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பதிவு: மே 24, 2019 22:09

சூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

குஜராத்தின் சூரத் நகரில் வணிக வளாகத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 குழந்தைகள் பலியானதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

பதிவு: மே 24, 2019 21:16

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.

பதிவு: மே 24, 2019 19:52

16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.

பதிவு: மே 24, 2019 19:11

சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 24, 2019 18:31

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி: பிரதமர் மோடிக்கு விராட் கோலி வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மோடிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 18:24

வாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ - உண்மை தெரியுமா?

வாட்ஸ்அப் செயலியில் வேகமாக வலம் வரும் அதிர்ச்சி வீடியோவின் உண்மை பின்னணியை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 24, 2019 18:03

காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வெல்வதா? - திக்விஜய் சிங் வேதனை

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வென்றது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 16:45

பாராளுமன்றத்துக்கு செல்லும் 76 பெண் எம்.பிக்கள்

பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 76 பெண் எம்.பிக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக செல்ல உள்ளனர்.

அப்டேட்: மே 24, 2019 17:45
பதிவு: மே 24, 2019 16:17

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று மாலை சந்திக்கிறார்

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்திக்கிறார்.

அப்டேட்: மே 24, 2019 17:29
பதிவு: மே 24, 2019 16:11

மோடி புதிய மந்திரிசபை - அமித் ஷா நிதி மந்திரி ஆகிறார்

பிரதமர் மோடியின் புதிய மந்திரிசபையில் அமித் ஷா நிதி மந்திரியாக்கப்படுவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு: மே 24, 2019 15:04

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி., அமேதி காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் உ.பி. மாநில தலைவர் ராஜ் பபர் ராஜினாமா செய்தார்.

பதிவு: மே 24, 2019 14:59

சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக அனிருதா போஸ், போபண்ணா, பூஷன் ராமகிருஷ்ணா கவாய், சூர்யகாந்த் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.

பதிவு: மே 24, 2019 14:15